சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வந்த இடைத்தேர்தல் நிறைவடைந்தது. இதில், 77 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தேர்தலில், காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 41 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 57 சதவீதமும், 5 மணி நிலவரப்படி 74.5 சதவீதமும் வாக்குப்பதிவாகி இருந்தது. மேலும், 84 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வாக்களித்து வந்தனர். இந்நிலையில், இறுதியாக மொத்தம் 77 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். அன்றே தேர்தல் முடிவு வெளியிடப்படும். இதன்மூலம், ஆர்.கே.நகர் தொகுதிக்கான புதிய சட்டமன்ற உறுப்பினர் யார் எனவும் தெரிந்துவிடும்.