விவசாயிகளின் பொருளதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளுக்கான 20-வது கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், தனியார் செயற்முறை கருவூட்டாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
ஒவ்வொருவர் வீட்டில் வளர்க்கப்படும் பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை, மற்றும் இதர கால்நடைகள் விபரம் கணக்கெடுக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பை பொறுத்து, கால்நடைகளுக்கான தேவையான மருத்துகள், தடுப்பூசிகள், அரசு நலத்திட்டங்கள் ஆகிவை பெறப்பட உள்ளது.
மேலும், அழிந்து வரும் இனங்களை அறிந்து அவற்றை பாதுகாப்பது, இந்த கணக்கெடுப்பில் கால்நடைகள் மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் மீன் வளர்ப்பு விபரங்களும் சேகரிக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களில் 283 கால்நடைக் கணக்கெடுப்பாளர்கள், 53 மேற்பார்வையாளர்கள், 10 விசாரணை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20வது கால்நடை கணக்கெடுக்கும் பணியை சென்னை ராயப்பேட்டை பட்டுலாஸ் சாலையில் தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு உதவி பொது மேலாளர் மைதிலி துவங்கி வைத்தார்.