வேளாண் அலுவலர் பதிவிக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்பட்டன. இதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., சார்பில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கம் சேவையின் கீழ் 2015-2-16, 2016-2017, 2017-2018 மற்றும் 2018-2019 பதிவு செய்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கபட்டுள்ளனர். அவர்களுது சான்றிதழ்களை கம்பூயட்டர் நகல் எடுத்து, வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 9ஆம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் தேர்வாகும் தேர்வர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர் என்றும். பின்னர் உடனடியாக இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
முடிவுகளை தெரிந்துகொள்ள:http://www.tnpsc.gov.in/results/sel_cv_i_aoext_2k18_list.pdf