தீபாவளி பண்டிகையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை இன்று தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தீவித்திடலில் பட்டாசு கடைகள்அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. தீ விபத்து நடைபெறாமல் இருப்பதற்காக தீயணைப்புவண்டி, ஆம்புலன்கள் ஆகியவையும் தயாராக வைக்கப்படுள்ளது. கடைகள் அமைக்கும் பணிகள்முடிவடைந்த நிலையில் இன்றுமுதல்பட்டாசு விற்பனை தொடங்குகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர பட்டாசு
விற்பனையாளர்கள்சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் 70 கடைகள்அமைக்கப்பட்டுள்ளன. எல்லா கடைகளும் முறையாக உரிமம் பெற்றுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று முதல் தீவுத்திடலில் பட்டாசுவிற்பனை தொடங்கி உள்ளது. சிவகாசியில் உள்ள தரமான பட்டாசு நிறுவனத்தில் இருந்துதயரிக்கப்பட்ட பட்டாசுகள்தீவுத்திடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியில் வாங்கும் பட்டாசைவிட 10 சதவிகித சலுகையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது‘’ என்று அவர் தெரிவித்தார்.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில் மட்டும் பேருந்தில் எடுத்து செல்ல தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் பட்டாசு எடுத்துச் சென்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை செய்துள்ளது.
தீபாவளிப் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் கவனதிற்கு பட்டாசுகளை பேருந்தில் எடுத்து செல்லாதிற்கள் தேவையில்லாத அபதாரம் கட்டும்படி நேரிடும் பட்டாசுகளை பேருந்தில் எடுத்து செல்வதும் நல்லது அல்ல. பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுங்கள்