தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்ததில் ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் பீமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி டெங்கு காய்ச்சல் காரணமாக, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரக்கோணத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் ரியாஸ் காய்ச்சல் தீவிரம் அடைந்ததால், உடனடியாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ரியாஸ் வரும் வழியி லேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் சரவணன் கடந்த சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தான். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி யைச் சேர்ந்த ரபீக் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் தமிழகத்தில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன் திருவள்ளூர் காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பலியானது குறிப்பிடதக்கது.