நவம்பர் மாதம் நடைபெற உள்ள குருப் 2 தேர்வுகான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 11ந் தேதி, 1199 காலி பணியிடங்களுக்கான தேர்வு தொகுதி-2 பணிக்கான முதல்நிலை தேர்வினை 32 மாவட்டங்களிலும் நடத்த உள்ளது.
இந்த குருப் 2 தேர்வுக்காக 6 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் https://tnpsconline.in/ipg2aclive18/FrmLogin152018.aspx இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எனில் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது tnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் சந்தேகங்களை தெரிவித்து கொள்ளலாம்.
தமிழ்நாடு தொழிலாளர் பணியில் அடங்கிய உதவி ஆணையர் தொழிலாளர் பதவிக்கான எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி அடிப்படையில் நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 5 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது