மதில்மேல் பூனை... ஸ்டாலினுடன் வைகோ இன்று மாலை சந்திப்பு

Vaiko to mee MK Stalin on today

by Mathivanan, Nov 28, 2018, 09:17 AM IST

கூட்டணி தொடர்பாக ஊசலாட்டத்தில் இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்க உள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என சபதம் எடுத்தவர் வைகோ. ஆனால் தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் வைகோவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதில் துரைமுருகன் உள்ளிட்ட திமுக சீனியர்கள் முனைப்புடன் இருந்தனர்.

இதனால் அதிமுக பக்கம் சாயும் முயற்சிகளை வைகோ மேற்கொள்ள தொடங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என துரைமுருகன் அறிவித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத வைகோ, குமுறியபடி ஸ்டாலின்தான் கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற விரும்புவதாக கூறினார். இதேபோல் இன்று மாலை ஸ்டாலினை வைகோவும் சந்தித்து பேச இருக்கிறார். ஸ்டாலினுடனான வைகோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

You'r reading மதில்மேல் பூனை... ஸ்டாலினுடன் வைகோ இன்று மாலை சந்திப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை