பிரளயமாக வெடிக்கப் போகும் கருணாநிதி மரணம்... அழகிரிக்கு வலை விரிக்கும் டெல்லி Exclusive

Azhagiri to create controversy over Karunanidhi death?

Nov 28, 2018, 08:50 AM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் களத்தில் கருணாநிதியின் மரணத்தை முன்வைத்து பரமபத விளையாட்டை நடத்த டெல்லி வியூகம் வகுத்திருப்பதாக கூறப்படுகிறது.

திமுகவில் ஸ்டாலின் தலைமையை ஏற்கவும் தயார் என கூறி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் ஸ்டாலின் தரப்பு இதை முற்றிலும் நிராகரித்தது.

தற்போது சைலண்ட்டாக அழகிரி ஆதரவாளர்களை திமுகவில் இருந்து வெளியேற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இது திமுக தலைமைக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்கிற குழப்பத்தில் இருக்கின்றனர் திமுக தொண்டர்கள்.

திமுகவில் இருந்து தாங்கள் வெளியேற்றப்படும் நிலையில் அழகிரியின் அடுத்த மூவ் என்ன என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர். அவருக்கு தற்போது இருக்கும் வாய்ப்புகள் இரண்டுதான். ஒன்று ரஜினிகாந்துடன் கை கோர்ப்பது அல்லது பாஜகவுடன் இணைந்து செயல்படுவது.

இந்த இரு முகாம்களில் இருந்தும் அழகிரியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் ஸ்டாலின் தரப்பு எப்படியாவது இறங்கி வந்துவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறாராம் அழகிரி.

அதே நேரத்தில் டெல்லிவாலாக்களோ, அழகிரி- ஸ்டாலின் இணைந்துவிடவே கூடாது என்பதில் படுபிடிவாதமாக இருக்கிறதாம். அப்படி அழகிரி தங்களது வலையில் விழுந்துவிட்டால் லோக்சபா தேர்தல் நேரத்தில் கருணாநிதியின் மரணத்தை முன்வைத்து சர்ச்சையை அவர் கிளப்பினால் அது தங்களுக்கு சாதகம் என கணக்கு போடுகிறதாம் டெல்லி.

-எழில் பிரதீபன்

You'r reading பிரளயமாக வெடிக்கப் போகும் கருணாநிதி மரணம்... அழகிரிக்கு வலை விரிக்கும் டெல்லி Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை