அரசியலை கதிகலக்க வரும் ”தினகரன் லீக்ஸ்! விரைவில் ”மணி அமைச்சரின் அந்த ஆடியோ ரிலீஸ்!! Exclusive

Advertisement

தினகரனின் சீக்ரெட் நடவடிக்கைகளால் கிலியோடு நாட்களை நகர்த்தி வருகின்றனர் அவரது ஆதரவு முக்கியப் பிரமுகர்கள். 'நம்மைப் பற்றி என்ன ரகசியத்தை வைத்திருக்கிறாரோ' எனவும் அவர்கள் பயப்படுகின்றனர்.

சென்னை, ஆர்.கே.நகர் வெற்றிக்குப் பிறகு அரசியலில் வலிமையான இடத்தைப் பெற போராடி வருகிறார் அமமுகவின் தினகரன். கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி இருந்தாலும் முழு அதிகாரமும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

தங்க.தமிழ்ச்செல்வனைத் தவிர வேறு யாரும் சசிகலாவை சந்திக்காமல் இருந்தனர். இந்தக் கோபம் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பில் வெடிக்கவே, பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தனர் 18 பேரில் சிலர்.

இதன்பிறகும் அவர்களுக்குத் தேவையான கோரிக்கைகள் எதுவும் பெரிய அளவில் ஈடேறவில்லை. இந்த நிலையில்தான், தினகரனின் செயல்பாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றனர் அமமுகவினர்.

இதைப் பற்றிய பேசும் அமமுக பொறுப்பாளர்கள், அதிமுகவில் தினகரன் வலிமையான இடத்தைப் பிடிப்பார் என நம்பித்தான் அவருடன் இருந்து வருகிறோம். ஆனால், அதற்கான அறிகுறிகளே இல்லை.

அதே சமயத்தில் முக்கியமான விஷயம் ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறோம்.

ஆர்.கே.நகரில் ஜெயிப்பதற்காக அம்மா மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டார் வெற்றிவேல். தினகரன் சொல்லித்தான் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டார்.

இதனால் தேர்தலிலும் அவர் ஜெயித்தார். அதன்பிறகும், அமைதியாக இருக்காமல் 'ஜெயக்குமாருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிந்து என்ற பெண்ணை ஏமாற்றிவிட்டார்' எனக் கூறி, அதுதொடர்பான ஆடியோக்களும் வெளியானது. இதற்கும் வெற்றிவேல்தான் காரணம்.

இந்த சம்பவத்தால் சில நாட்கள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தார் ஜெயக்குமார். அடுத்ததாக, 'மணி'யில் முடியும் அமைச்சர் ஒருவரின் ஆடியோவையும் வெளியிட இருக்கிறார்கள். ஒவ்வொருவரைப் பற்றிய தனிப்பட்ட ரகசியங்களை வெளியிடுவது நல்லதல்ல. எங்களைப் பற்றிய பல விஷயங்களை தினகரன் அறிவார். இதோபோல் ஆடியோக்களை சேகரித்து வைத்திருப்பாரோ என பயப்படுகிறோம்.

அரசியல்வாதிகளுக்கு ரகசியங்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியமானது. அதனை தினகரன் மீறுவதுதான் வேதனையைக் கொடுக்கிறது. இதைப் பற்றி அவருக்கு யார் எடுத்துச் சொல்வார்கள் என்றும் தெரியவில்லை' எனக் கண்ணீர் வடிக்கின்றனர்.

- அருள் திலீபன்

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>