சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பி யாக அபய்குமார் சிங் நியமனம்

ADGP Abhay Kumar Singh head idol wing after Manickavel

by Devi Priya, Nov 30, 2018, 12:01 PM IST

ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து திருடப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்தும், நடராஜர் சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்தும் மீட்டுக் கொண்டு வந்தவர் ஐஜி பொன் மாணிக்கவேல். சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஜஜி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர், ரயில்வே மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பொன் மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையுடன் பணியில் இருந்து ஓய்வுபெறும் நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிய ஐஜியாக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங்-ஐ தமிழக அரசு நியமித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரூரில் உள்ள தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அபய் குமார் சிங், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி பதவி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய ஏ.டி.ஜி.பி யாக அபய்குமார் சிங் நியமனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை