அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி, கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு பற்றி தமிழக அரசு 4 வாரத்தில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
இதுகுறித்து நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தொடர்ந்து மனு தாக்கல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது உதவி பேராசிரியர் கருப்பசாமி ஜாமீன் மனு பற்றி தமிழக போலீஸ் 4 வாரத்தில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.