திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா ? என்ற கேள்வியுடன் அறிவாலயம் போன மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதுபற்றி எதுவும் பேசாமல் மௌனமாக திரும்பி வந்தார்.
திமுக தரப்பிலும் எதுவும் கருத்து கூறவில்லை. இதுபற்றி நாம் விசாரித்தபோது, திமுகவை பொறுத்தவரை மதிமுகவுக்கு இரண்டு சீட்டுகள் என்பது மட்டும் உறுதி. அது, கொங்கு மண்டலத்தில் ஒன்று, தென் மாவட்டத்தில் ஒன்று என்று தான் திமுக முடிவெடுத்திருந்தது.
ஆனால், வைகோவோ லோக்சபா தேர்தலில் 1 தொகுதி கிடைத்தால் கூட போதும். அதேநேரத்தில், எனக்கும் லோக்சபா தேர்தலுக்கும் ராசியில்லை. நான் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவேன் என்பது வரலாறு. இதனால், என்னை ராஜ்யசபா எம்.பி., ஆக்குங்கள் என ஸ்டாலினிடம் வலியுறுத்தி பேசி இருக்கிறார் வைகோ.
வைகோவின் இந்த பேச்சை ஸ்டாலின் ரசிக்கவில்லையாம். வைகோவை பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் தாம் வெல்ல முடியாது என்பதை தெரிந்தே ராஜ்யசபா சீட்டிற்காக ஸ்டாலினிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார் வைகோ. அதனாலேயே, ஸ்டாலினை எல்லா பொதுக் கூட்டங்களிலும் தளபதி என்றும் நாளைய முதல்வர் என்றும் ஐஸ் வைத்துக் கொண்டிருக்கிறார் வைகோ.
இதை தெரியாத மதிமுக தொண்டர்கள் விழி பிதுங்கி கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், வைகோவிற்கு லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு இடம் கொடுத்தாலும் போதும் ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டாம் என்று துரைமுருகன் உள்ளிட்ட திமுக சீனியர்களும் அடம்பிடிப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-எழில் பிரதீபன்