தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா? என புதிய தலைமுறை டிவியில் வைகோவிடம் கேட்கப்பட்ட கேள்வி இப்போது திமுக கூட்டணிக்கே வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாலர் வன்னி அரசு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தம்முடைய வீட்டில் தலித்துகள் வேலை செய்வதாக புதிய தலைமுறையில் வைகோ கூறியிருப்பது மனவருத்தத்தைத் தருகிறது என சாடியிருந்தார். இந்த பதிவை வன்னி அரசு பின்னர் நீக்கிவிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, திருமாவளவனை 2006 சட்டசபை தேர்தலின் போது என் வீட்டுக்கு அழைத்து ரூ30 லட்சம் கொடுத்தேன், பின் ரூ 20 லட்சம் கொடுத்தேன்.
திருமாவளவன் இந்த நாட்டில் வளர்ந்து வருகிற நல்ல தலைவர் என்று தமிழ்நாடு முழுதும் சென்று பேசினேன். வன்னியரசு, இதை நீங்களாக எழுதவில்லை. இதை எழுத உங்களுக்கு உத்தரவிட்டது யார்?
அரசியல் பண்பாடோட வளந்தவன்யா நான். எனக்கு சாதியெல்லாம் தெரியாது. நான் பெரியாரின், அம்பேத்காரின் வாரிசு என சீறியிருந்தார். இது குறித்து
இது பற்றி இன்று சென்னையில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, வைகோவின் கோபம் என் மீதா? வன்னி அரசு மீதா? நான் யாரையும் தூண்டிவிடும் அற்பப் பிறவி அல்ல என காட்டமாக பதில் அளித்தார்.