அமைச்சர் ஓ.எஸ். மணியனை வெட்டி கொலை செய்ய அரிவாளுடன் பாய்ந்த நபர்- வீடியோ

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன் கார் மீது அரிவாளால் தாக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஜா புயல் சீரமைப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் செய்யவில்லை என்கிற கோபம் டெல்டா மக்களிடத்தில் இருக்கிறது. இதனால் அமைச்சர்கள் செல்லும் இடங்களில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஒருமுறை சுவர் ஏறி தப்பி குதித்த சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று பார்வையிட்டார்.

 

அப்போது அவரது காரை வழிமறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு முழுமையாக நிவாரணம் வந்து சேரவில்லை என கொந்தளித்தனர்.

இந்த களேபரத்துக்கு நடுவே அரிவாளுடன் ஓ.எஸ். மணியன் கார் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த ஒருவர் முயன்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.