சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

Sonia Gandhi unveils Karunanidhi statue

by Mathivanan, Dec 16, 2018, 17:28 PM IST

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

கருணாநிதிக்கு 9 அடி உயர வெண்கல சிலை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று மாலை 5.20 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுவை முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு அனைவரும் சென்றனர். அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் கட்சித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், டி. ராஜா, பாஜக எம்பி. சத்ருகன் சின்ஹா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You'r reading சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை