செல்ஃபோன் சேவை நிறுவனமான ஏர்டெல் 59 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது.
தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸின் ஜியோ, அதிரடி சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தது. இதனால், மற்ற சேவை நிறுவனங்கள் பலத்த பாதிப்பிற்கு உள்ளானது. அதே சமயம் மற்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை காட்டியது.
ஆனாலும், ஜியோவின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆனால், ஏர்டெல் நிறுவனம் ஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிரடி சலுகைகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ரூ.59க்கு புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, ரூ.59க்கு ரீசார்ஜ் செய்தால், உள்ளூர் மற்றும் உள்நாட்டு அழைப்புகளுக்கு இலவசமாகவும், நாளொன்றிற்கு 500 எம்.பி. டேட்டாவும், தினசரி 100 குறுந்தகவல்களும் அனுப்பிக்கொள்ள முடியும்.
இந்த சலுகை 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தற்போது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. தங்களுக்கு இந்த சேவை வழங்கப்படுமா என்பதை உறுதிசெய்து கொண்டு பின்னர் ரீசார்ஜ் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.