ஸோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு கோ (Go) வகையைச் சேர்ந்த ரெட்மி கோ ஸ்மார்ட் போன் மார்ச் 22ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட், Mi.com மற்றும் Mi அங்காடிகளில் விற்பனையாகிறது.
இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் செயல்படக்கூடிய கூகுள் கோ செயலிகள் இதில் நிறுவப்பட்டிருக்கும். ஹிந்தி மற்றும் Hinglish மொழிகளில் செயல்படும் கூகுள் அசிஸ்டெண்ட் என்னும் உதவியும் இந்த போனில் கிடைக்கும்.
ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 5 அங்குலம்
இயக்கவேகம்: 1 ஜிபி
சேமிப்பளவு: 8 ஜிபி (256 ஜிபி வரை கூடுதலாக்கும் வசதி)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 425 சிப்செட்; 1.4 GHz
பின்பக்க காமிரா: 8 மெகாபிக்ஸல்
முன்பக்க காமிரா: 5 மெகாபிக்ஸல்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
மின்கலம்: 3,000 mAh
இரண்டு சிம்கார்டு பயன்படுத்தும் வசதி, மைக்ரோயூஎஸ்பி, ப்ளூடூத் 4.2, வைஃபை வசதிகள் கொண்ட ரெட்மி கோ ரூ.4,499/- விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200/- கேஷ்பேக் சலுகையுடன் இலவசமாக 100 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.