ரியல்மி 3: மார்ச் 26 முதல் கிடைக்கிறது

Realme 3rsquos flash sale on Flipkart at 12pm today

by SAM ASIR, Mar 26, 2019, 14:41 PM IST

செயற்கை நுண்ணறிவுடன் (AI) கூடிய 13 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மார்ச் 26ம் தேதி நண்பகல் முதல் விற்பனையாகிறது. ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து ரியல்மி 3 போனை பெற்றுக்கொள்ளலாம்.

ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.2 அங்குலம் ஹெச்டி வகை; 19:9 விகிதாச்சாரத்துடன்

இயக்கவேகம்: 3 ஜிபி RAM மற்றும் 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான கலர்ஓஎஸ் வி6.0

பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி70 ஆக்டாகோர் 2.1 GHz

முன்பக்க காமிரா: 13 எம்பி ஆற்றல்; செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆளறி கடவுச்சொல்

(Facial Unlock)

பின்பக்க காமிரா: 13 எம்பி மற்றும் 2 எம்பி கொண்ட இரு காமிராக்கள்

மின்கலம்: 4230 mAh ஆற்றல்

வைஃபை, ப்ளூடூத் வி4.2, 4ஜி, 4ஜிVoLTE, 3.5 ஹெட்போன் ஜாக் போன்ற வசதிகளுடன் கூடிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி / 32 ஜிபி வகை ரூ.8,999 மற்றும் 4ஜிபி / 64 ஜிபி வகை ரூ.10,999 விலைகளில் கிடைக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கி கடன் மற்றும் பண அட்டை பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.500 சிறப்பு சலுகை உண்டு. மாதாந்திர எளிய தவணைக்கு இந்த அட்டைகளை பயன்படுத்தினால் 5 விழுக்காடு தள்ளுபடி உண்டு.

You'r reading ரியல்மி 3: மார்ச் 26 முதல் கிடைக்கிறது Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை