லிங்க்ட்இன் தளத்தில் கூடுதல் வசதி

வேலை தேடுவதற்கான தளமான லிங்க்ட்இன் (LinkedIn) பயனர்களின் திறன்களை பட்டியலிடுவதற்கு புதிய வசதியை கூடுதலாக தருகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான தளம் லிங்க்ட்இன். இது வேலைவாய்ப்பு தேடுவோருக்கு பெருமளவில் உதவி வருகிறது. பயனர்கள் தங்கள் கல்வி தகுதி, பணி அனுபவம் மற்றும் தனித்திறன்களை இதில் பட்டியலிட்டிருப்பர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்களைப் பற்றிய விவரங்களை பயனர்கள் தங்கள் தங்கள் பக்கங்களில் இணைத்திட (attaching) லிங்க்ட்இன் வசதி செய்தது. நவம்பர் மாதம் லிங்க்ட்இன் தளத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள் விவரங்களை பிடிஎஃப் மற்றும் பவர் பாயிண்ட் உள்ளிட்ட ஆவணங்களாக பதிவேற்றம் (upload) செய்யும் வசதி கொடுக்கப்பட்டது.

நிறுவனங்களுக்கு தரப்பட்ட வசதி தற்போது தனிப்பட்ட பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் தனித்திறன் மற்றும் மென்திறன் விவரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களுக்கான பக்கம், கோவை (feed) மற்றும் குழுக்களில் (group) பிடிஎஃப் மற்றும் பவர் பாயிண்ட் வடிவில் பதிவேற்றம் செய்ய முடியும். இவை குறித்து பின்னூட்டங்கள் இடுவதற்கும், உரையாடுவதற்கும் முடியும்.

கணினி (Desktop) மூலம் லிங்க்ட்இன் பயன்படுத்துவோருக்கு இந்த வசதி கிடைக்கிறது. லிங்க்ட்இன் செயலியில் விரைவில் இப்புதிய வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds