சுழலக்கூடிய மூன்று காமிராக்களை கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ80 தான். வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் நேரடி விற்பனை நிலையங்கள் மற்றும் இணையதளங்களில் இது விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ80 போனின் சிறப்பம்சங்கள்
தொடுதிரை: 6.7 அங்குலம் எஃப்ஹெச்டி; சூப்பர் AMOLED
இயக்கவேகம்: 8 ஜிபி RAM
சேமிப்பளவு: 128 ஜிபி
காமிரா: இதில் மூன்று காமிராக்கள் உள்ளன. மூன்றும் பாப்-அப் மற்றும் சுழலும் தன்மை கொண்டவை. முப்பரிமாண தரம் கொண்ட காமிராக்கள் நேரடியாக வீடியோ பதிவு செய்யத்தக்க ஆற்றல் கொண்டவை. 48 எம்பி ஆற்றல் கொண்டது மட்டுமன்றி அகன்ற கோணத்தில் படம் எடுக்கக்கூடியவை.
பிராசஸர்: குவல்காம் சிநாப்டிராகன் 730ஜி ஆக்டாகோர் சிப்செட்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு பை; இதன் முன்தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஒன் பயனர் இடைமுகம் பயன்படுத்தப்படுகிறது
மின்கலம்: 3,700 mAh (வேகமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள 25W திறன்)
சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுக்கு விலையாக ரூ.47,990/-நிர்ணயிக்கப்பட்டுள்ளது.