அழகுக்கு வில்லனாகும் ஸ்மார்ட்போன்!

Advertisement

ஸ்மார்ட்போன் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற அளவுக்கு அன்றாட வாழ்வோடு பின்னி பிணைந்துள்ளது. ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவதால் மனரீதியான பல பாதிப்புகள் வருவதாக கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனை பயன்படுத்துவோரின் சரும அழகும் பாதிப்புக்குள்ளாகிறதாம்.

கண்களை பாதிக்கும் ஸ்மார்ட்போன்

"மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா" என்று கண்களுக்கு மீனை உவமையாக கூறுவர். மீன்களைப் போன்ற கண்கள், மான்போன்ற மருண்ட பார்வை என்றெல்லாம் கண்களும் பார்வையும் அழகுக்கான முக்கிய காரணிகளாக வர்ணிக்கப்படுகின்றன.

வயதாகும்போது கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கை. முப்பது வயதை தாண்டியவர்களுக்கு பெரும்பாலும் இதுபோன்ற சுருக்கங்கள் உண்டாகின்றன. கண்களின் ஓரத்தில் அதிக சுருக்கம் தென்படுவது அழகைக் குறைக்கும்.

ஸ்மார்ட்போன் திரையை தொடர்ந்து உற்றுப் பார்ப்பதால், கண்களின் ஓரங்களிலுள்ள சருமத்தில் நெருக்கமான கோடுகள் தோன்றுகின்றன. கண்களின் தசையை சுருக்கி, அதிக நேரம் போனை கூர்ந்து பார்ப்பதால் இருபது வயதிலேயே கண்களின் ஓரத்தில் சுருக்கங்கள் விழலாம். அது முக அழகை பாதிக்கும்.

கற்றாழையும் கண்ணழகும்

ஸ்மார்ட்போன் திரையை அதிக நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். கற்றாழையின் சதைப்பகுதியை கண்களுக்குக் கீழே தடவி, கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இது கண்களின் அழகை பாதுகாக்கும்.

பருவும் பாக்டீரியாவும்

ஸ்மார்ட்போனை காதுகளில் வைத்து பேசும்போது, நம் உடலிலுள்ள நுண்கிருமிகள், போனின் திரைக்குப் பரவுகின்றன. அங்கு அவை தங்கி பல்வேறு நுண்ணுயிரிகளை தங்களுடன் சேர்க்கின்றன. மறுமுறை நாம் பேசும்போது மீண்டும் நம்மீது நுண்ணுயிரிகள் தங்குகின்றன. இவை முகப்பரு உள்ளிட்ட பாதிப்புகளுக்குக் காரணமாகின்றன.

சுத்தம் செய்யும் வேதிப்பொருள்கள்

கூடுமானவரைக்கும் ஸ்மார்ட்போனை நேரடியாக முகத்தில்படும்படி வைத்து பேசுவதை தவிர்க்கலாம். ஹெட்போன் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போன் திரையை மைக்ரோஃபைபர் துணி கொண்டு தினமும் சுத்தம் செய்யவேண்டும். முகத்தை பென்சாயில் பெராக்ஸைடு மற்றும் சாலிசைக்ளிக் அமிலம் போன்ற சுத்திகரிப்பான்களால் சுத்தம் செய்ய வேண்டும்.

வெளிரும் சருமம்

சருமம் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறி காணப்படும் குறைபாட்டையும் ஸ்மார்ட்போன் உருவாக்கும். சருமம் தன்னிறத்தை இழந்து வெளிறி மஞ்சளாக மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். சருமம் வெளிருவது முதுமையின் அடையாளமல்ல. அளவுக்கு அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதால் சருமம் வெளிரக்கூடும்.

நீர்ச்சத்து

படுக்க செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பதாக ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது. நாள்முழுவதும் உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்கும்படியாக பார்த்துக்கொண்டால் சரும பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

கழுத்துப் பாதிப்பு

குனிந்து ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டேயிருப்பதால் கழுத்தில் பாதிப்பு உருவாகிறது. கழுத்து பகுதியில் உள்ள தோல் மீட்சிதன்மையை இழக்கிறது. குனிந்தபடியே இருப்பதால் கழுத்தில் வலி உருவாகும்.

பார்வை மட்டத்தில்

ஸ்மார்ட்போனை குனிந்து பார்க்காமல் பார்வை மட்டத்திற்கு உயர்த்தி வைத்துப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கழுத்துப் பகுதியை உறுதி செய்யும் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் பாதிப்பை தவிர்க்கலாம்.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
/body>