மத்திய அரசின் ஆதார் கார்டு அடையாள அட்டை திட்டத்துக்கு துபாயில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நாடு முழுவதும் ஆதார் கார்டு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அடையாள அட்டையில் வழங்கப்பட்டுள்ள 12 இலக்கு எண்ணை வங்கி கணக்கு முதல் சிம் கார்டு கணக்கு வரையில் அனைத்திலும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், ரூ.500 செலுத்தினால் வாட்ஸ் அப் மூலம் அனைவரின் தனிப்பட்ட ஆதார் தாகவல்களும் வழங்கப்படுகிறது என்ற செய்தியும் வெளியானது. ஆனால், தனிப்பட்ட தகவல்கள் யாருடையதும் கசிவதில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆதார் கார்டு கட்டாயமாக்குவதற்கு பல தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், துபாயில் நடந்த மாநாட்டு ஒன்றில் ஆதார் அட்டை திட்டதுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
துபாயில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்ட மாநாடு நடைபெற்றது. இதில், அரசு துறையில் வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பத்துக்கான சிறப்பு விருதாக ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, இந்திய அரசின் ஆதார் திட்ட உதவி பொது இயக்குனர் கதிர் நாராயணாவுக்கு வழங்கப்பட்டது.