நோக்கியா 5.3 மொபைல் போன் அறிமுகம்: செப்டம்பர் 1 முதல் விற்பனை

Introducing the 5.3 mobile phone

by SAM ASIR, Aug 25, 2020, 18:03 PM IST

தனி கூகுள் அசிஸ்டெண்ட்பொத்தானுடன் புதிய நோக்கியா மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு 8 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா முன்புறம் உள்ளது. விரல்ரேகை உணரியும் (fingerprint sensor) இதில் உள்ளது.

சிறப்பம்சங்கள்

திரை: 6.55 அங்குலம்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 665
முன்பக்க காமிரா: 8 எம்பி ஆற்றல்
பின்பக்க காமிரா: 13 எம்பி; 5 எம்பி; 2 எம்பி; 2 எம்பி ஆற்றல்
இயக்க வேகம்: 3 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி (512 ஜிபி வரை கூட்டும் வசதி)
மின்தேக்க திறன்: 4000 mAh
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10

4 ஜிபி + 64 ஜிபி கொண்ட நோக்கியா போனுக்கு ரூ.13,999/- விலையும், 6 ஜிபி + 64 ஜிபி போனுக்கு ரூ.15,499/- விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது. ஆனால் நோக்கியா இணையதளத்தில் இப்போதே பதிவு செய்து கொள்ளலாம்.

சலுகைகள்: நோக்கியா 5.3 மொபைல் போன் வாங்கும் ஜியோ சந்தாதாரர்களுக்கு ரூ.4,000/- மதிப்புள்ள சலுகைகள் உள்ளன.

You'r reading நோக்கியா 5.3 மொபைல் போன் அறிமுகம்: செப்டம்பர் 1 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை