சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சி வழங்கும் இந்தியன் வங்கி !

Bank of India offers CCTV repair training

by Loganathan, Sep 21, 2020, 20:57 PM IST

இந்தியன் வங்கியின் சயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தருமபுரி , இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் தற்போது சிசிடிவி கேமரா நிறுவுதல் மற்றும் பழுது நீக்கும் பயிற்சி , பெண்களுக்கான தையல் பயிற்சி ,கறவை மாடு வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன . இப்பயிற்சியில் சேர் விரும்புவோர் , வருகிற அக்டோபர் 1 வரை விண்ணப்பிக்கலாம்.18 முதல் 45 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறம் சார்ந்தவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் , தங்களது பெயர் , முகவரி , விரும்பும் பயிற்சி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்பி நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 04342-230511 ,234464 மற்றும் 9442274912 என்கின்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Technology News

அதிகம் படித்தவை