தமிழக அரசை நம்பி சென்னையில் கூகுள் நிறுவனம் கடை விரிக்குமா?
தமிழக சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கையின் போது, திமுக எம்.எல்.ஏ பெரியசாமி, 'கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர்பிச்சை சென்னை வநத போது, அவரை தமிழக அரசு சார்பில் யாரும் சந்திக்கதது ஏன்' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டன், ''சுந்தர்பிச்சை தனிப்பட்ட முறையில் சென்னை வந்ததால், அவரை தமிழக அரசு தரப்பில் இருந்து யாரும் சந்திக்கவில்லை. ஆனால், சென்னை அல்லது மதுரையில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருதாகத் தெரிவித்துள்ளர்.
அமைச்சர் டி.ஜெயக்குமார், ''மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மைக்ரோசாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்களை சந்தித்தாகவும், அ.தி.மு.க. அரசு என்றும் வல்லுநர்கள், அறிஞர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டவர். அவரது வழி நடக்கும் நாங்களும் எந்த அறிஞர்களையும் புறக்கணித்தது இல்லை' என்றார்.