இந்தியாவில் இருக்கும் குழுவினரால் கியோனீ தயாரிப்புகள் உருவாக்கப்பட உள்ளன. எங்கள் நிறுவனம் எல்லா சாதனங்களையும் நாட்டுக்குள்ளே தயாரிக்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் தரம்வாய்ந்த யூஐ மற்றும் யூஐ தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க கியோனீ முயற்சிக்கிறது என்ற அறிவிப்போடு பட்ஜெட் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீலம், கறுப்பு மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கியோனி எஃப்8 நியோ ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது.
கியோனீ எஃப்8 நியோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 5.45 அங்குலம் எல்சிடி
இயக்கவேகம்: 2 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி (256 ஜிபி வரை மைக்ரோசிடி மூலம் அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்
பிராசஸர்: ஆக்டா-கோர்
You'r reading 2ஜிபி + 32 ஜிபி: கியோனீ பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம். Originally posted on The Subeditor Tamil