போகோ சி3க்கு இணையான வசதிகள்: சாம்சங் கேலக்ஸி எம்02 போன் - பிப்ரவரி 9 முதல் விற்பனை

by SAM ASIR, Feb 3, 2021, 19:18 PM IST

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் இரட்டை காமிராக்கள் மற்றும் மீடியாடெக் சிஸ்டம் ஆன் சிப் தொழில்நுட்ப பிராசஸருடன் விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன், போகோ சி3, ரெட்மி 9, ரியல்மீ சி15 மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் 1பி போன்ற ஸ்மார்ட்போன்களை போன்ற அம்சங்களை கொண்டிருப்பதால் இவற்றுக்குப் போட்டியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்02 சிறப்பம்சங்கள்:
சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+; இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
இயக்கவேகம்: 2 ஜிபி மற்றும் 3 ஜிபி
சேமிப்பளவு: 32 ஜிபி (மைக்ரோ எஸ்டி மூலம் 1 டிபி வரை அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 5 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி ஆற்றல் இரட்டை காமிராக்கள்
பிராசஸர்: குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6739 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ
மின்கலம்: 5,000 mAh
சார்ஜிங்: 10W

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி வசதிகள் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி வகை ரூ.6,999/- விலையிலும் 3 ஜிபி + 32 ஜிபி வகை ரூ.7,499/- விலையிலும் பிப்ரவரி 9ம் தேதி முதல் அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா தளங்களில் விற்பனையாகும். முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். கறுப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் இது கிடைக்கும். அறிமுக சலுகையாக அமேசானில் ரூ.200/- தள்ளுபடி உண்டு.

You'r reading போகோ சி3க்கு இணையான வசதிகள்: சாம்சங் கேலக்ஸி எம்02 போன் - பிப்ரவரி 9 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை