48 எம்பி ஆற்றலுடன் குவாட் காமிரா: கேலக்ஸி எம்12 அறிமுகம்

by SAM ASIR, Mar 12, 2021, 23:52 PM IST

4ஜி நெட்வொர்க்கில் 58 மணி நேரம் தொடர்ந்து பேசக்கூடிய விதத்தில் 6000 mAh ஆற்றல் கொண்ட மின்கலத்துடன் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 b/g/n, புளூடூத் 5.0 வசதியுடன் மொத்தம் 221 கிராம் எடை கொண்டதாக இப்போன் அறிமுகமாகியுள்ளது.


சாம்சங் கேலக்ஸி எம்12 சிறப்பம்சங்கள்


சிம்: இரட்டை நானோ சிம்
தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்), டிஎஃப்டி இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (எஸ்டி கார்டு மூலம் 1 டிபி கூட்டலாம்)
செல்ஃபி காமிரா: 8 எம்பி ஆற்றல்
குவாட் காமிரா: 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
பிராசஸர்: எக்ஸினோஸ் 850 SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு ஒன் யூஐ
மின்கலம்: 6000 mAh


சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி + 64 ஜிபி வகை சாதனம் ரூ.10,999/- விலையிலும், 6 ஜிபி + 128 ஜிபி வகை சாதனம் ரூ.13,499/- விலையிலும் மார்ச் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு விற்பனையாக ஆரம்பிக்கும். அமேசான், சாம்சங்.காம் இணையதளங்களிலும், தெரிந்தெடுக்கப்பட்ட கடைகளிலும் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

You'r reading 48 எம்பி ஆற்றலுடன் குவாட் காமிரா: கேலக்ஸி எம்12 அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை