ஆர் ஓ சிஸ்டம் வாங்கப் போகிறீர்களா? இவற்றை கவனியுங்கள்

Advertisement

கோடையில் தண்ணீர் தேவை அதிகம். தட்டுப்பாடும் அதிகம் தான். ஆகவே வீட்டிலேயே நீரை குடிநீராக சுத்திகரிக்கக்கூடிய ஆர் ஓ வாட்டர் ப்யூரிஃபையரை பலர் வாங்கி பயன்படுத்துவர். எதிர் சவ்வூடு பரவல் என்னும் ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. அக்கம்பக்கத்து வீடுகளில் வாங்கியுள்ளனர்; நண்பர் வாங்கியுள்ளார்; உறவினர் வாங்கியுள்ளார் என்று பொத்தாம் பொதுவாக ஆர் ஓ சிஸ்டத்தை வாங்கிவிடக்கூடாது. பலர் அப்படித்தான் வாங்குகின்றனர்.

தண்ணீர் சுத்திகரிப்பானை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

ஆர் ஓ சிஸ்டத்தை பொறுத்த மட்டில் றிடிஎஸ் (TDS)என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியதாகும். டோட்டல் டிஸ்ஸால்டு சாலிட்ஸ் என்பதே TDS என்பதன் விரிவாகும். அதிகமான அளவு TDS இருந்தால் அது குடிக்க உதவாத தண்ணீர் என்று பலர் எண்ணுகின்றனர். அப்படியல்ல. குடிக்கும் அளவுக்கு சுவை உள்ளதா? மனிதர்கள் குடிப்பதற்கு உகந்ததா? என்பதை மட்டுமே நாம் கவனிக்கவேண்டும். உடலுக்குத் தேவையான அத்தியாவசிய உப்புகள் நீரிலிருந்து பிரிக்கப்பட்டு விட்டால் அந்த தண்ணீரை குடிப்பதால் நமக்கு நன்மை ஏற்படாது. மிகவும் சுத்தமான தண்ணீர், தாதுகள் நீக்கப்பட்ட தண்ணீர் மற்றும் குறைவான TDS கொண்ட தண்ணீர் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். ஆனால் ஈயம் (lead), செம்பு (copper) போன்ற வேதிப்பொருள்கள் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, TDS அளவைக் காட்டிலும் இது போன்ற வேதிப்பொருள்கள் நீங்கள் அருந்தும் நீரில் இருக்கின்றனவா என்பதேயே அதிகம் கவனிக்கவேண்டும்.

ஆர் ஓ வாட்டர் ப்ரியூஃபையர் தேவைப்படாதோர்

எல்லோருக்கும் எதிர் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் கொண்ட சுத்திகரிப்பான் தேவையில்லை. நகராட்சி வழங்கும் அல்லது தரையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் TFDS அளவு 250ppm என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் சாதாரண சுத்திரிப்பான் போதும். ஏற்கனவே ஈயம், செம்பு ஆகியவை பிரித்தெடுக்கப்பட்ட தண்ணீருக்கு ரூ.1,600/- என்ற அளவில் விலை வரம்பு கொண்ட சுத்திகரிப்பு சாதனம் போதுமானது.

TDS அளவுக்கேற்ற சுத்திகரிப்பான்

நீரின் TDS அளவு 250ppmக்கு அதிகமாக இருந்தால் ஆர் ஓ சுத்திகரிப்பானை பயன்படுத்தலாம். சில இடங்களில் 1800ppmக்கு அதிகமாகவும் இருக்கும். அந்தந்த அளவுக்கேற்ற சாதனத்தை தேர்வு செய்யவேண்டும். ஆர் ஓ சாதனம் வாங்கும் முன்னர் உங்கள் பகுதி நிலத்தடி நீர் அல்லது நகராட்சி நீரின் TDS அளவை அறிந்துகொள்ள வேண்டும்.

ஃபில்டர்கள்

சுத்திகரிக்கும் சாதனம் வாங்கும்போது மினரல் (தாது) ஃபில்டர், புற ஊதா (யூவி) அல்ட்ரா ஃபில்ட்ரேஷன் (யூஎஃப்) மற்றும் வரையறுக்கப்படும் TDS (Manuel TDS)போன்ற ஃபில்டர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். மினரல் ஃபில்டர், நீருக்கு சுவையூட்டக்கூடியது. அது எதிர் சவ்வூடு பரவல் (ஆர்ஓ) செயல்பாட்டுக்குப் பின்னர் நடக்கும். புற ஊதா கதிர் (யூவி) ஃபில்டர் நீரிலுள்ள பாக்டீரியாக்களை மட்டும் கொல்லும். அது நீரின் TDSல் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அல்ட்ராஃபில்ட்ரேஷன் (யூஎஃப்) பாக்டீரியாக்களையும் தீங்கு தரக்கூடிய பொருள்களையும் வடிகட்டும். ஆனால் நீரிலுள்ள தாதுகளையும் உப்புகளையும் வடிகட்டாது. எம்றிடிஎஸ் என்னும் மேனுவல் TDS, நீரின் TDS அளவை சீராக்க உதவும். TDS அளவு குறைவாக இருந்தால், அத்தியாவசியமான உப்புகளை அது அனுமதிக்கும். நீரின் TDS அளவு 300 ppm ஆக இருந்தால் மட்டுமே ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் வகை சுத்திகரிப்பானை வாங்கலாம்.

இந்த ஃபில்டர்களை மாற்றக்கூடிய நேரம் வந்து விட்டது என்பதை அறிவிக்கும் வசதி கொண்ட (இன்டிகேட்டர்) சாதனமாக வாங்கவேண்டும.

கொள்ளளவு

ஆர் ஓ வாங்கும்போது குறைந்தது 10 லிட்டர் கொள்ளவு கொண்டதாக வாங்குவது நல்லது. கோடைக்காலத்தில் மின் தடை ஏற்படக்கூடும். அது நீண்டநேரம் நீடித்தால் குடிக்க தண்ணீர் இல்லாத நிலை ஏற்படலாம். ஆகவே, உங்கள் பகுதியில் மின் தடை ஏற்படும் நேரத்தை கணக்கிட்டு அதிக கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பான்களை வாங்கலாம்.

வீணாகும் நீர்

நமக்கு தண்ணீரை சுத்திகரித்து தருவதற்காக சாதனம் அதிக நீரை கழிவாக வெளியேற்றும். 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை பெறும்போது 4 லிட்டர் நீர் வரைக்கும் கழிவாக வெளியேறக்கூடும். குறைந்த அளவு நீரை கழிவாக வெளியேற்றும் ஆர் ஓ சாதனத்தை விசாரித்து வாங்க வேண்டும். வீணாகும் நீரை வேறு சுத்திகரிக்கும் வேலைகளுக்கு அல்லது செடிகளுக்கு பாய்க்க வசதி செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்கும் நிறுவனத்தின் ஆர் ஓ சாதனத்திற்கு பழுது பார்க்கும் சேவை கிடைக்கிறதா? உதிரி பாகங்கள் கிடைக்கின்றனவா என்பதை விசாரித்துக்கொள்வது அவசியம்.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
/body>