எச்டிஎஃப்சி, ஸ்டாண்டர்ட் சார்ட்டட், கோடக் மஹிந்திரா, பரோடா வங்கி, பெடரல் வங்கி ஆகிய வங்கிகளின் வாடிக்கையாளருக்கு 5 சதவீதம் கேஷ்பேக், பேடிஎம் வாடிக்கையாளருக்கு 11 சதவீதம் என்று அறிமுக விலை சலுகையுடன் ஆப்போ ஏ54 ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது.
ஆப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை: 6.51 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்), எல்சிடி
ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 60Hz
பிக்ஸல் டென்சிட்டி: 269 ppi
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் கூடுதலாக்கும் வசதி)
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா: 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (டிரிபிள் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765வி) SoC
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; கலர்ஓஎஸ் 7.2
மின்கலம்: 5000 mAh
சார்ஜிங்: 15W பாஸ்ட் சார்ஜிங்
பக்கவாட்டில் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட்), 4 ஜி, வைஃபை, புளூடூத் 5, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய வசதிகள் கொண்டது.
4 ஜிபி + 64 ஜிபி வகை சாதனம் ரூ.13,490 விலையிலும், 4 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.14,490 விலையிலும், 6 ஜிபி + 128 ஜிபி சாதனம் ரூ.15,990 விலையிலும் ஏப்ரல் 20ம் தேதி நண்பகல் 12 முதல் ஃபிளிப்கார்ட் தளத்திலும், முன்னணி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.