வந்துவிட்டது கூகுள் டியூப்லக்ஸ்: நுண்ணறிவு மென்பொருளால் புதிய புரட்சி

May 12, 2018, 16:50 PM IST

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தரும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் கணினி மென்பொருள் மாநாடு நடைபெற்றது. இதில், கூகுள் தனது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை அறிமுகம் செய்துள்ளது. அதுதான், கூகுள் டியூப்லக்ஸ் என்கிற வசதி. இது ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகும். இதனை, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னெவென்றால், நமக்கு எளிதாக அப்பாயின்ட்மென்ட் வாங்கி கொடுத்துவிடுகிறது. அதாவது, உணவு விடுதியோ, மருத்துவமனையிலோ, பியூட்டி பார்லரிலோ நமக்காக செல்போனில் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொடுக்கிறது. கூகுள் பேசுவதை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மனிதக் குரலில் தெளிவாக பேசும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் இந்த இடத்தில் அப்பாயின்ட்மென்ட் வேண்டும் என்றால் போதும், அது தானாகவே கேள்விக்கு ஏற்றவாறு சமயோஜிதமாக மென்பொருள் பதிலளிக்கும். அதோடு நம்மிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதற்கு தேவையான கேள்விகளையும் கேட்கும்.

இந்த மென்பொருள் சில வாரங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது சரியான முறையில் செயல்பட்டால் மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

You'r reading வந்துவிட்டது கூகுள் டியூப்லக்ஸ்: நுண்ணறிவு மென்பொருளால் புதிய புரட்சி Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை