அக்னி 5 ஏவுகணை: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா!

by Rahini A, Jun 3, 2018, 20:54 PM IST

அக்னி 5 ஏவுகணையை இன்று காலை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஆக்னி 5 ஏவுகணை மூன்று ஸ்டேஜும், 17 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அலகமும் கொண்டது. மேலும், 1. 5 டன் கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. 5,000 கிலோ மீட்டர் வரை இந்த ஏவுகணை பயணப்பட்டு, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்.

ஒடிசா கடலோரத்தில் இருக்கும் டாக்டர் அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த ஏவுகணை, இன்று காலை 9.48 மணிக்கு ஏவப்பட்டது. ஏவுகணை, வானில் செலுத்தியதில் இருந்து இலக்கைத் தாக்கும் வரை பல உணரிகள், கேமராக்கள் மூலம் அதன் பாதை, பறக்கும் உயரும் என பல்வேறு விஷயங்கள் கண்காணிக்கப்பட்டன.

மற்ற அக்னி வகை ஏவுகணைகளைப் போல இது அல்ல இது. மற்ற எல்லாவற்றையும் விட இதில் அதி நவீன தொழில்நுட்பம் நேர்த்தியாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை சரியாக தாக்கியது' என்று கூறப்பட்டது.

அக்னி வரிசையில் அக்னி- 5 வெற்றிகரமாக சோதனை செய்யப்படும் ஐந்தாவது ஏவுகணை. இதற்கு முன்னர் சோதனை செய்யப்பட்ட அக்னி- 1 700 கிலோ மீட்டரும், அக்னி- 2 2000 கிலோ மீட்டரும், அக்னி-3 மற்றும் 4 2500 கிலோ மீட்டரும் பயணப்பட்டு குறிப்பிட்ட இலக்கை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அக்னி 5 ஏவுகணை: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா! Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை