இந்தியாவின் அடுத்த ஆண்டு கே.டி.எம் 390 அட்வென்சர் ரக புது மாடல் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் கேடிஎம் 360 அட்வென்சர் ஐரோப்பியாவில் சோதனை முயற்சியாக சில முறைகள் நகர் வலம் வந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தியாவில் இந்த ரகம் அறிமுகம் ஆகுமா என்பதே பலருக்கும் கேள்விக்குறியாகத் தான் இருந்தது.
இந்திய சந்தைக்கு ஏற்ப கே.டி.எம் 390 அட்வென்சர் பைக் கொடுக்கப்பட்டுள்ளது. கேடிஎம் பிராண்ட் என்பது தொடர்ந்து விருதுப்பட்டியலில் 17 முறை நீங்கா இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அட்வென்சர் ரக பைக்குகள் உற்பத்தியில் பைக் காதலர்களின் மனதில் நீங்கா இடம் என்றைக்கும் கேடிஎம் பிராண்ட்டுக்கு இருக்கும்.
இந்தியாவில் இந்த ரகம் அறிமுகம் ஆவதே மோட்டார் பிரியர்களுக்கு பெரிய வாய்ப்பு, வரம் ஆகும். தகுதியானது மட்டுமல்லாமல் விலை நிறைவான ஒரு அடெவென்சர் பைக் தான் கே.டி.எம் 390 அட்வென்சர். இதற்குப் போட்டியாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், பிஎம்டபிள்யூ மோட்டாராடுக்கு இந்தியாவில் 10 டீலர்கள் தான் உள்ளனர். ஆனால், கேடிஎம்-க்கு 430 டீலர்களும், 320 ஷோரும்களும் இந்தியாவில் உள்ளன. இது பெரிய வாய்ப்பாக உள்ளது.