மக்கள் எலெக்ட்ரிக் கார்கள் வாங்கிப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் 2.0 என்ற திட்டத்தின் கீழ், மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, தனி நபர்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மட்டுமே இந்த மானியம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுப் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் கார்களுக்கு இந்த மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டொயாட்டோ கார் உற்பத்தி நிறுவன செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் பொது பயன்பாட்டுக்கு உபயோகபடுத்தப்படும் கார்கள் மின்சார கார்களாக மாறும். இதனால், எரிபொருள் தேவை குறைவாகும். மேலும், காற்று மாசு அளவும் வெகுவாக குறையும் என்றுள்ளார்.
இந்திய அரசு, வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களையும் மின்சார மயமாக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த திட்டம் 2047 ஆம் ஆண்டு தான் நிறைவேறும் என்று கார் உற்பத்தி நிறுவனங்கள் அரசிடம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.