உலகின் முன்னணி மொபைல் போன் தயாரிப்பாளரான ஜியோமி, தனது எம்.ஐ பேட் 4, டேப்லட்டை சீனாவில் நடந்த நிகழ்ச்சியில் வெளிட்டுள்ளது.
இந்த டேப்லட்டுடன் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட் போனையும் வெளியிட்டுள்ளது ஜியோமி. பேட் 4, வை-ஃபை மற்றும் வை-ஃபை + எல்.டி.இ ஆகிய வகைகளில் வெளிவர உள்ளன. 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த டேப்லட்டை ஒரு கையில் பயன்படுத்தக் கூடிய வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
விலை மற்றும் ரிலீஸ் தேதி, எம்.ஐ பேட் 4, சீன விலைப்படி 1,099 ரென்மின்பி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய விலைப்படி 11,500 ரூபாயாக இருக்கும். இது வை-ஃபை மட்டும் இருக்கும் டேப்லட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள விலை. வை-ஃபை + எல்.டி.இ வகை டேப்லட்டுக்கு 14,600 ரூபாய் பக்கம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் தங்க மஞ்சள் வண்ணங்களில் இந்த டேப்லட் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 29 ஆம் தேதி இந்திய சந்தைக்கு இந்த டேப்லட்கள் வருகின்றன. இப்போதே, ரிசர்வ் செய்து கொள்ளவும் முடியும். 8 இன்ச் முழு ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, 16:10 ரேஷியோவில் இருக்கும்.
283 பிபிஐ பிக்சல் அடர்த்தி டிஸ்ப்ளேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 13 மெகா பிக்சல் பின் மேரா மற்றும் 5 மெகா பிக்சல் முன் கேமரா கொண்ட இந்த போனில், 32 அல்லது 64 ஜிபி சேமிப்பு வசதி பொருத்தப்பட்டு உள்ளது.