மைக்ரோமேக்சின் கேன்வாஸ் ஸ்பார்க் 2 அறிமுகம்

Jun 26, 2017, 02:41 AM IST

மைக்ரோமேக்சின் கேன்வாஸ் ஸ்பார்க் 2 அறிமுகம்..

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கேன்வாஸ் பதிப்பில் புதிய போனான மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 2 (Micromax canvas spark 2) என்ற போனை வெளியிட்டுள்ளது இந்த போன் தற்போது பிரத்யேகமாக
ரூ. 3999 -க்கு ஸ்நாப்டீல் இணையதளத்தில் கிடைக்கின்றது.

இந்நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை "India ka 3G Phone" என்றழைக்கின்றது. இந்த போனின் முன்பதிவு நாளை (செப்டம்பர் 23) முதல் ப்ளாஸ் சேல் ஆக நடைபெறவுள்ளது.


இந்த போன் 5 இன்ச் அளவு கொண்ட FWVGA IPS திரையைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்டிராய்ட் லாலிபாப் ஒ.எஸ்.ல் இயங்க கூடியது. இந்த போன் 1.3 GHz quad core பிராசசரைக் கொண்டது. மேலும் 4gb இன்டெர்னல் சேமிப்பு திறனை உள்ளடக்கிய இந்த போனில் அதற்கு மேல் கூடுதலாக 32 gb வரை விரிவுபடுத்தியும் கொள்ளலாம்.

அதே போல் கேமரா பகுதியைப் பார்க்கும்போது 5mp முதன்மை கேமராவையும் 2mp செல்பி கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் 3g,wifi, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிடி அம்சத்தையும் பெற்றுள்ளது. அதோடு 1800mAh பேட்டரி திறனையும் கொண்டுள்ளது.


இந்த போனை வெளியிடுகையில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் தேஜா கூறுகையில் கேன்வாஸ் ஸ்பார்க் ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது குறிப்பிடத்தக்கது.


அதாவது கேன்வாஸ் ஸ்பார்க் ஸ்மார்ட் போன் வெளியிட்ட இரண்டு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட அரை மில்லியன் யூனிட்டுகள் விற்கப்பட்டது.


தற்போது ஸ்மார்ட்போன் ஊடுருவல் நாட்டில் 12% உள்ளது அதே போல் 3g 10% என்ற மோசமான நிலையிலேயே உள்ளது. இதை மேம்படுத்துவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு தற்போது நிலவியுள்ளது. மேலும் 3-4k மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் ஈ-காமர்ஸ் இணையதளத்தில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மைக்ரோமேக்சின் இந்த குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை கொடுக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

You'r reading மைக்ரோமேக்சின் கேன்வாஸ் ஸ்பார்க் 2 அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை