புதிதாக ஃபேஸ்புக் கணக்கு துவங்க ஆதார் எண் கோரும் புதிய அம்சத்தை இணைக்கப்பட உள்ளது.
இந்திய நாட்டைப் பொறுத்தவரை அனைத்து சலுகைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. மேலும், வங்கிக் கணக்குகள் முதல் தொலைபேசிக்கான சிம் கார்டுகள் வாங்குவது வரை ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்துவரும் போலி ஃபேஸ்புக் கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கும், சட்டரீதியான சிக்கல்களை தவிர்ப்பதற்கும் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த அம்சத்தை பரிசீலனை செய்து வருகிறது.
ஆதாரில் உள்ள பெயரை பயன்படுத்தும் போது நண்பர்களால் உங்களை மிக எளிமையாக கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கட்டாயமாக்கப்படாது என்றும் தேவையான்வர்கள் இந்த புதிய வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது தொலைபேசி பயணாளர்களுக்கு மட்டும் இந்த அம்சத்தை செயல்படுத்தி உள்ளது. உலகளவில் ஃபேஸ்புக் பயனாளிகள் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 24.1 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் பயன்படுத்திப்பட்டு வருகிறது.