பிக்ஸல் போனில் படத்தின் தரத்தை உயர்த்த வந்துவிட்டது நைட் சைட்!

Night Sight has come to raise the quality of the film on the pixel phone!

by SAM ASIR, Nov 16, 2018, 18:34 PM IST

கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் பிக்ஸல் 3 (Pixel 3) ரக போனை சந்தைக்குக் கொண்டு வந்தது. அதில் 'நைட் சைட்' (Night Site) எனப்படும் புதிய வசதி கொண்ட காமிரா இருப்பது சிறப்பம்சமாக கூறப்பட்டது. இந்த காமிராவை கொண்டு குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அது தரமானதாக இருக்குமாம்.

சாதாரணமாக ஸ்மார்ட் போனில் உள்ள காமிராவை பயன்படுத்தி, குறைந்த வெளிச்சத்தில் படம் எடுத்தால், படம் தெளிவில்லாமல், தரம் குறைந்ததாக, புள்ளிகள் (noise) நிறைந்ததாக இருக்கக்கூடும். படத்தின் தரத்தை உயர்த்துவதற்கான சென்சார்கள் மற்றும் லென்ஸில் வெளிச்சத்தின் அளவை மாற்றக்கூடிய, தரம் உயர்த்தப்பட்ட அபெச்சர் (aperture) என்னும் வசதி இருந்தால்கூட படங்களின் தரம் உயரவில்லை. நைட் சைட் வசதி எல்லா பிக்ஸல் போன்களின் முன் பக்க மற்றும் பின் பக்க காமிராக்களிலும் பயன்படக்கூடியது.

ஃப்ளாஷ் அல்லது டிரைபாட் (tripod) என்னும் தாங்கி இதற்குத் தேவையில்லை.
சாதாரண ஸ்மார்ட் போன் காமிராவில் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் படங்கள் தெளிவற்றவையாக இருக்கும். ஆனால், நைட் சைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பொருட்கள், மனிதர்கள், இடங்கள் தெளிவாக இருக்கும் என்று இதற்கான அறிமுக விழாவில் விளக்கமளிக்கப்பட்டது.

முதலில் வெளியான பிக்ஸல் போனில் ஓஐஎஸ் என்னும் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilization) வசதி தரப்படவில்லை. ஆகவே, குறைவான தொலைவில் உள்ள காட்சிகளையே அதைக்கொண்டு படமாக்க முடியும். பின்னர் வெளியான பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸல் 3 போன்களில் இது நல்ல பலனை அளிக்கும். பிக்ஸல், பிக்ஸல் 2 மற்றும் பிக்ஸர் 3 வகை சாதனங்களில் பயன்படுத்தும் வண்ணம் 'நைட் சைட்' இன்னும் சில நாட்களில் கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே பிக்ஸல் போன்களை வைத்திருப்போருக்காக வெகு விரையில் நைட் சைட் வசதி கொண்ட கூகுள் காமிரா செயலி (Google Camera app), பிளே ஸ்டோரில் வெளியிடப்பட உள்ளது.

புகைப்படம் எடுக்கப்படும் சூழலிலுள்ள அசைவு, ஒளிமாசு ஆகியவற்றை நைட் சைட் வசதி கட்டுப்படுத்துகிறது என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. படம் எடுப்பவரின் கையின் நடுக்கத்தை உணர்ந்து அதற்கேற்ப புகைப்படத்தை எடுக்கக்கூடியதாக இந்த மென்பொருள் அமைந்துள்ளது.

உங்கள் காமிராவில் நைட் சைட் வசதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொண்டு, தைரியமாக குறைந்த வெளிச்சத்திலும் புகைப்படம் எடுக்கலாம்; ஆனால், குறைந்த அளவு வெளிச்சம் கூட இல்லாத இரவில் இது எதிர்பார்க்கும் பலனை அளிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

You'r reading பிக்ஸல் போனில் படத்தின் தரத்தை உயர்த்த வந்துவிட்டது நைட் சைட்! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை