25 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன் மிரள வைக்கும் வசதிகளுடன் களமிறங்கும் ரியல்மீ யூ1

RealMe U1 Mobile Introduces 25 Megapixel Cellphy Cameras

by SAM ASIR, Nov 28, 2018, 19:34 PM IST

புகைப்படம் எடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் செல்போனை ரியல்மீ நிறுவனம் தனது யூ- இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சீன நிறுவனமான ஆப்போவின் துணை நிறுவனமான ரியல்மீ கடந்த செப்டம்பர் மாதம் ரியல்மீ- 2 ப்ரோ மற்றும் ரியல்மீ -சி1 செல்போன்களை அறிமுகம் செய்தது. தற்போது Helio P70 SoC கொண்ட செல்போன் ரியல்மீ - யூ1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 5ம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து அமேசான் இந்தியா இணையதளம் மூலம் இதை வாங்க முடியும்.

ரியல்மீ யூ1 சிறப்பம்சங்கள்:தொடுதிரை: 6.3 அங்குலம் FHD; 1080X2340 பிக்ஸல் தரம்; எல்சிடி வகை; கொரில்லா கிளாஸ்

ஒளிரும் அளவு: 450 நிட்ஸ்

பிராசஸர்: ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 SoC

முன்பக்க காமிரா: 25 மெகாபிக்ஸல் சோனி IMX576 சென்ஸார்; புகைப்படம் எடுக்கப்படும் பொருளுக்கு பின்புறத்தில் பிரகாசமான ஒளி தெரிந்தாலும் தரமாக எடுக்கக்கூடிய வசதி (Backlight mode) கொண்டது.

பின்பக்க காமிரா: 13 மெகாபிக்ஸல் மற்றும் 2 மெகாபிக்ஸலுடன் எல்இடி பிளாஷ் கொண்ட இரண்டு காமிராக்கள் உள்ளன. முகத்தை கொண்டு செல்போனை இயக்க அனுமதி கொடுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதி இருக்கிறது. பின்பக்கத்தில் விரல் ரேகை மூலம் கடவுச்சொல் அமைத்துக் கொள்ளலாம்.

சேமிப்பளவு: 32 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பளவுகளில் கிடைக்கிறது. 256 ஜிபி வரைக்கும் சேமிப்பளவை எஸ்டி கார்டு மூலம் அதிகரித்துக் கொள்ள முடியும்.

மின்கலம்: 35000 mAh

அளவு: 157X74X8 மி.மீ.

எடை: 168 கிராம்

விலை: 3 ஜிபியுடன் 32 ஜிபி சேமிக்கும் திறன் கொண்ட செல்போன் ரூ. 11,999 மற்றும் 4 ஜிபியுடன் 64 ஜிபி சேமிப்பளவு கொண்ட செல்போன் ரூ. 14,499 கிடைக்கும். எஸ்.பி.ஐ. வங்கி அட்டைகளை பயன்படுத்தி வாங்குவோருக்கு 5 விழுக்காடு கேஷ்பேக் வசதி உண்டு. மாதாந்திர தவணை மற்றும் ஜியோவின் 5,750 ரூபாய் வரையிலான பண பலன்களும் ஜியோவின் 4ஜி தரத்திலான 4.2 டிபி டேட்டாவும் கிடைக்கும்.

You'r reading 25 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமராவுடன் மிரள வைக்கும் வசதிகளுடன் களமிறங்கும் ரியல்மீ யூ1 Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை