2018ம் ஆண்டின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

Best Budget Smartphone in 2018

Dec 14, 2018, 07:22 AM IST

2018ம் ஆண்டு இறுதியை நெருங்கிவிட்டது. இந்த ஆண்டின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக ரியல்மி 2 ப்ரோ, ஹானர் 8 எக்ஸ், ரெட்மி நோட் 6 ப்ரோ ஆகிய மொபைல்கள் தேர்வாகியுள்ளன.

ஸியோமி நிறுவனம் மாதத்திற்கு ஒரு போனை இறக்குவது போல, பட்ஜெட் விலையில் சரசரவென்று நிறைய மொபைல்களை இறக்கி மற்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து கடந்த ஆண்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

இந்நிலையில், ஸியோமியின் ரெட்மி போன்களுக்கு போட்டிக் கொடுக்க நினைத்த ஓப்போ நிறுவனம், ரியல்மி எனும் கிளை நிறுவனத்தின் மூலம் ரியல்மி வகை போன்களை இந்த ஆண்டு அதிகப்படியாக இறக்கியுள்ளது. மேலும், அது நினைத்த முதலிடத்தையும் பெற்றுள்ளது.

ஸியோமி மற்றும் ஓப்போ நிறுவனங்களின் போட்டியில், ஹுவாய் நிறுவனமும் கலந்து கொண்டு விலை குறைவு மற்றும் நிறைந்த தரம் மற்றும் ஸ்டைலிஷ் கொண்ட ஹானர் 8எக்ஸ் போனை இறக்கி மொபைல் ரசிகர்களை தனது பக்கம் இழுத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கிய நோக்கியா நிறுவனம் 2 ஆண்டுகளாக நோக்கியா மொபைல்களை சந்தையில் இறக்கினாலும், பெரிதாக வாடிக்கையாளர்களை கவரவில்லை. நாமும் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என அது ரிலீஸ் செய்த நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து டாப் 5 இடங்களுக்குள் உள்ளது.

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எனும் பட்டத்தை இந்த போட்டியில் தட்டிச் சென்றுள்ளது. ஆனால், ஹானர் 8எக்ஸ் தான் வின்னர் என ஹுவாய் ரசிகர்களும், ரெட்மி நோட் 6 ப்ரோ தான் எப்பவுமே ராஜா என ஸியோமி வாடிக்கையாளர்களும் கமெண்ட் போர் நடத்தி வருகின்றனர். இந்த போன்கள் அனைத்தும் 15 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்கின்றது.

பத்தாயிரம் ரூபாய்க்குள் சிறந்த மொபைல் என்றால் நோக்கியா 5.1 பிளஸ் மொபைலை வாங்கலாம். அதற்கும் குறைவான பட்ஜெட் என்றால் ரியல்மியின் சி1 மொபைல் 7500 ரூபாய்க்கு பட்ஜெட் ராஜாவாக திகழ்கிறது.

ப்ரீமியம் வகையிலான ஃபிளாக்‌ஷிப் போன்ற ஸ்மார்ட் போன் 20 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குமா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, ஹுவாய் நிறுவனம் ஹானர் பிளே மொபைலை களமிறக்கியது. ஆனால், ஸியோமி நிறுவனம் அதற்கும் போட்டியாக போகோ எஃப் 1 ரக போனை சந்தைப்படுத்தி அதிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிக பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் வாங்கவேண்டுமானால், ஒன் பிளஸ் 6டி 36 ஆயிரம் ரூபாய்க்கு சிறந்த தேர்வு என ஸ்மார்ட்போன் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஐபோன் தான் எனது சாய்ஸ் என சொல்லும் ஹை-ஃபை பிரியர்களுக்காக ஐபோன் எக்ஸ் எஸ் ஸ்மார்ட்போன் 99 ஆயிரம் விலையில் விற்பனைக்கு வந்து ஸ்மார்ட்போன்களின் சூப்பர்ஸ்டாராக உள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆஃபர்களில் மொபைல் வாங்கினால், சலுகைகளும், கேஷ்பேக் போன்ற ஆஃபர்களும் கிடைக்கின்றன.

You'r reading 2018ம் ஆண்டின் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை