கேமிங் ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ல் அறிமுகமாகிறது

The gaming smartphone is introduced on December 20th

by SAM ASIR, Dec 18, 2018, 19:25 PM IST

கேம் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக்கை நியூபியா நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஃபோவாய் (Huawei) மேட் 20 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 6டி இவற்றுக்கு ரெட் மேஜிக் போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த ரெட் மேஜிக் இப்போதுதான் இந்தியாவுக்கு வருகிறது.

கேமிங் பட்டன்:
ரெட் மேஜிக்கில் விளையாட்டுக்கான கேமிங் முறைக்கு மாற்றுவதற்கு பிரத்யேக பொத்தான் உள்ளது. இந்த முறைக்கு மாற்றப்பட்டால் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்ற அனைத்துத் தொடர்புகளும் தடை செய்யப்பட்டு விடும். விளையாட்டை இன்பமான அனுபவமாக்குவதற்காக இந்தப் பொத்தான் மூலம் 'டர்போ அக்ஸலரேஷன்' (turbo acceleration mode) என்ற முறைக்கும் மாற்றிக் கொள்ளலாம்.

ஏர் கூலிங்:
விளையாட்டுகளுக்கென்றே தயாரிக்கப்படுவதால் மூன்று அடுக்கு கிராபைட் பூச்சுகளும் காற்றை வெளியேற்றுவதற்காக ஒன்பது திறப்புகளும் (air radiation slots) கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

சிம்: இரண்டு நானோ சிம்களை பயன்படுத்தலாம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
தொடுதிரை: 5.99 அங்குலம் FHD 1080 X 2160 பிக்ஸல் தரம்
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிரகான் 835 சிஸ்டம் ஆன் சிப்
இயக்கவேகம்: 8GB of LPDDR4X RAM
காமிரா: முன்பக்கம் செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்ஸல் மற்றும் பின்பக்கம் 24 மெகாபிக்ஸல்
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பளவுகளோடு கிடைக்கும்
தொடர்பு வசதி: 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ac, ப்ளூடூத் v5.0, ஜிபிஎஸ்
இணைப்பு: டைப்-சி போர்ட் யூஎஸ்பி
ஹெட்போன்: 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்
லைட் சென்ஸார், எலக்ட்ரானிக் காம்பஸ், விரல்ரேகை சென்ஸார் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை கொண்ட நியூபியா ரெட் மேஜிக் சேமிப்பளவுகள் பொறுத்து 25,000 ரூபாய் முதல் 36,000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You'r reading கேமிங் ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ல் அறிமுகமாகிறது Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை