ஜிமெயில் கணக்கில் மற்ற இமெயில்களை சேர்ப்பது எப்படி?

How to add other emails to Gmail account?

by SAM ASIR, Dec 25, 2018, 15:30 PM IST

மின்னஞ்சல் என்றாலே ஜிமெயில் (Gmail) என்ற அளவுக்கு அது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டாலும் யாஹூ, ஹாட்மெயில் போன்ற வேறு நிறுவனங்களிலும் சிலர் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்பர். ஏற்கனவே வேறு நிறுவனங்களில் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி வந்தோர், புதிதாக ஜிமெயில் கணக்கொன்றையும் பயன்படுத்த தொடங்கியிருப்பர்.

வேறு மின்னஞ்சல் சேவை நிறுவனங்களின் கணக்கினை பயனர்கள் தங்கள் ஜிமெயில் கணக்குடன் சேர்த்துக்கொள்ள இப்போது ஜிமெயில் வசதி செய்துள்ளது. ஜிமெயில் போலவே ஏனைய மின்னஞ்சல்களை பொருள், அனுப்பியவர் போன்று வகைப்படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். ஏனைய மின்னஞ்சல்களை தனியாக ஒரு ஃபோல்டரினுள் (Folder) வைத்துக் கொள்ளலாம்.

ஜிமெயிலில் ஏனைய சேவை நிறுவனங்களின் மின்னஞ்சல்களை பார்ப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் போன்கள் அல்லது டேப்லெட்களில் ஜிமெயில் செயலியை நிறுவிக்கொள்ள வேண்டும்.

மேலே இடப்பக்கம் உள்ள பட்டியல் என்னும் மெனு பொத்தனை அழுத்தவும்.
உங்கள் ஜிமெயில் கணக்கு பெயருக்கு அடுத்தபடியாக காணப்படும் கீழ்நோக்கு (Down Arrow) பொத்தானை அழுத்தவும்.

கணக்குகளை சேர்த்துக் கொள்ளும் +Add பொத்தனை அழுத்தவும்
அங்கே காணப்படும் பல்வகை சேவை நிறுவனங்களில் நீங்கள் சேர்க்க விரும்பும் நிறுவனத்தை தெரிவு செய்யவும்.

கூகுள், அவுட்லுக், ஹாட்மெயில், யாஹூ மற்றும் எக்சேஞ், ஆபீஸ் 365 போன்ற மின்னஞ்சல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அங்குள்ள பட்டியலில் உங்களுக்குத் தேவையான மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் பெயர் காணப்படாவிட்டால் 'மற்றவை' என்பதை தெரிவு செய்யவும்.

உங்களுக்கான சேவை நிறுவனத்தை தெரிவு செய்த பிறகு, அந்த மின்னஞ்சல் பக்கத்தில் நீங்கள் உள்நுழைவதற்கான பட்டி தோன்றும்.

உங்களுக்கான பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி கணக்கினுள் நுழையலாம்.

You'r reading ஜிமெயில் கணக்கில் மற்ற இமெயில்களை சேர்ப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

More Technology News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை