பின்பக்கத்தில் 48 எம்பி, 12 எம்பி மற்றும் 3 டி டைம் ஆஃப் ஃப்ளைட் ஆற்றலுடன் கூடிய மூன்று காமிராக்களை பின்புறத்திலும்ம், தன்படம் எடுக்கக்கூடிய 24 எம்பி காமிராவை முன்புறத்திலும் கொண்ட மி9 ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் 6 ஜிபி இயக்கவேகத்துடனும் 128 ஜிபி சேமிப்பளவுடனும் இது கிடைக்கக்கூடுமென்றும், அறிமுக விழாவில் கூடுதல் விவரங்கள் கிடைக்குமெனவும் தெரிகிறது. 3500 mAh மின்னாற்றல் கொண்ட அகற்றப்பட முடியாத பேட்டரி உண்டு.
6.4 அங்குல எஃப்ஹெச்டி தரத்தில் 19:9 என்ற விகிதாச்சாரத்துடன் AMOLED தொடுதிரையுடன் கூடிய மி9 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிரகோன் 855 பிராசஸருடன் கிடைக்கும். இப்போன் 5 ஜி இணைய வேகம் கொண்டதாக இருக்கும். இதன் விலை 30,000 ரூபாயாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.