மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் லீக் போட்டி #MTBC

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் மூன்றாம் கட்ட லீக் போட்டி கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி மே மாதம் முதல் வாரம் முதல், வார இறுதி நாட்களில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டுகட்ட லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் (மே 19, 20) மூன்றாம்கட்ட லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களில், 54 அணிகளுக்கு இடையே 27 போட்டிகள் நடைபெற்றன.

இதில், MN Mavericks அணியைச் (Group E) சேர்ந்த ராஜ்கமல் என்பவர் NCIM அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அசத்தினார்.

இந்தியன் Colts அணியைச் சேர்ந்த (Group A) அசோக் என்பவர் 35 பந்துகளில் 70 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

எதிர் அணியின் வெற்றிக்கு 4- ரன் தேவைப்பட்ட நிலையில், V Rock - அணியைச் சேர்ந்த வினோத்குமார் கருப்பையா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 ரன் அவுட் செய்து எதிர் அணியின் வெற்றி வாய்ப்பை முறியடித்து, தனது அணியின் வெற்றிக்குத் துணைபுரிந்தார்.

மேலும், வீரர்கள் பெற்ற புள்ளியின் அடிப்படையில், MN Mavericks அணியை சேர்ந்த யசோதா பப்பிநிதி- 750 புள்ளிகள், Cummins Cricket Club (குமின்ஸ கிரிக்கெட் கிளப்) அணியை சேர்ந்த முரளி ரவீந்திரன்-572 புள்ளிகள் எடுத்து முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துள்ளனர். தொடர்ந்து, Desi Bandits (தேசி பண்டிட்ஸ்) அணியை சேர்ந்த வம்சி கிருஷ்ணா-527 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திலும், G XI அணியை சேர்ந்த பிரசாந்த் சர்மா-494 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்திலும், Champins United (சாம்பியன்ஸ் யுனைட்டட்) அணியை சேர்ந்த சரவணன் சசுரா- 470 புள்ளிகள் எடுத்து ஐந்தாம் இடத்திலும் உள்ளார்.

பின்னர், லீக் போட்டியின் முடிவில் முதல் 32 இடங்களில் உள்ள அணிகள் அடுத்தகட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், அடுத்த லீக் போட்டி வரும் ஜூன் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

Advertisement