80 கோடி ரூபாய்க்கு வைரம்… மகளுக்காக 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்த பாசக்கார தந்தை

Father buys his daughter a £10.6MILLION, 88.22-carat diamond

by Mari S, Apr 3, 2019, 13:08 PM IST

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, ஜப்பானைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர், 10.6 மில்லியன் யூரோவுக்கு(இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்க்கும் மேல்)- 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்துள்ளார்.

மிகவும் அரிதான முட்டை வடிவ அளவிலான வைரத்தை தனது மகளுக்கு பரிசளித்து இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தனது மகளின் பெயருடன் சேர்த்து, அந்த வைரத்துக்கு மனாமி ஸ்டார் என்ற புதிய பெயரையும் அந்த தொழிலதிபர் வைத்துள்ளார்.

ஹாங்காங்கில் இந்த வைர நகைகளின் ஏலத்தை நடத்திய செலிபிரிட்டி ஜுவல்லர் நிறுவனத்தின் சி.இ.ஓ எட்டி லிவியன் இதுகுறித்து கூறும்போது, செவ்வாயன்று நடந்த ஏலத்தில் மொத்தம் 200 வகையான வைரங்கள் ஏலம் விடப்பட்டன.

வெள்ளை வைரம், ஃபேன்சி வைரம் மற்றும் பல வகையான டிசைனர் நகைகளும் விலையுயர்ந்த கற்களும் ஏலம் விடப்பட்டன. இதில், மிகவும் விலையுயர்ந்த 88.22 காரட் வைரத்தை ஜப்பானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஏலத்தில் எடுத்ததாகக் கூறினார்.

You'r reading 80 கோடி ரூபாய்க்கு வைரம்… மகளுக்காக 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்த பாசக்கார தந்தை Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை