முன்னாள் காதலி பரிதாபங்கள்… முன்னாள் காதலன் திருமணத்தில் மணக்கோலத்தில் வந்து கலாட்டா செய்த இளம்பெண்!

ச்

சீனாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில், திருமணம் நடைபெற்ற சில நொடிகளில், புதுமணப்பெண்ணை, முத்தம் கொடுக்க மணமகன் முயலும் போது, திடீரென்று, இன்னொரு பெண் மணக் கோலத்தில், மேடைக்கு வந்து, அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சும் வீடியோ வைரலாகி உள்ளது.

தான் மணமகனின் முன்னாள் காதலி என்றும், சில காரணங்களுக்காக தாங்கள் பிரிந்துவிட்டோம் என்றும், தற்போது, அவரை விட்டு தன்னால் வாழ முடியாது எனவும் அந்த பெண் கெஞ்சுகிறார். இதனால், கோபமடைந்த மணப்பெண் அங்கிருந்து நகர்வது போல அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

மணப்பெண்ணும், தனது புதிய கணவருக்காக சண்டையிட்டதாகவும், பின்னர், அங்கிருந்த உறவினர்கள் அந்த பெண்ணை வெளியேற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அழையா விருந்தாளியாக வந்த முன்னாள் காதலி, இவர்களது திருமண வைபோகத்தை அலங்கோலமாக மாற்றிவிட்டு சென்று விட்டார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Tamil news, Latest Tamil News, Tamil News Online, Tamil Nadu Politics, Crime News, Tamil Cinema, Tamil Movies, Movie review, Sports News