லாஸ் ஏஞ்சல்ஸ்:அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நூறு மைலுக்கு அப்பால் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் குலுங்கியது.
அமெரிக்காவின் சுதந்திர தினமான இன்று உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தெற்கு கலிபோர்னியாவில் சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உணரப்பட்டது.இது ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி சூதாட்டத்திற்கு பேர்போன லாஸ் வேகாஸ் அருகேயுள்ளது.சுதந்திர தின விடுமுறையொட்டி அதிகளிவிலான மக்கள் இந்தப் பகுதிகளுக்கு வந்திருப்பார்கள்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி முழுமையான அறிக்கை இன்னும் அதிகாரிகளால் அளிக்கப்படவில்லை.
கலிபோர்னியா மாகாணம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக இருந்த போதிலும் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சுற்றியுள்ள மக்கள் மத்தியில் அடுத்த அதிர்வு பற்றிய அச்சம் தொற்றி கொண்டது.அமெரிக்காவின் மற்ற மாகாணங்களை விட கலிபோர்னியாவில் அதிகளவிலான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலக்கப்பட்டேன் – அமலாபால் ஓபன் ஸ்டேட்மெண்ட்!