விஜய்சேதுபதி படத்தில் இருந்து விலக்கப்பட்டேன் – அமலாபால் ஓபன் ஸ்டேட்மெண்ட்!

விஜய்சேதுபதியின் 33வது படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும் விலக்கப்பட்டுள்ளேன் என்றும் அதற்கு ஆடை பட டீசர் காரணமாக இருக்கலாம் என நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த ஆடை பட டீசர் சமீபத்தில் வெளியாகி, இந்தியளவில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த படத்தில் முழு நிர்வாணமாக நடிகை அமலாபால் நடித்திருந்தார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியின் 33வது படத்தை இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகநாத் இயக்க உள்ளார். இந்த படத்தில் அமலா பாலை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர்.

ஆனால், திடீரென கால்ஷீட் காரணமாக அமலா பால் படத்தில் இருந்து விலகியதாக படக்குழு தெரிவித்தது.

இதனை கேட்டு கோபமடைந்த அமலாபால், இதுகுறித்து நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தானாக இந்த படத்தில் இருந்து விலகவில்லை என்றும், வலுக்கட்டாயமாக தன்னை படக்குழு வெளியேற்றியுள்ளது என்றும், படத்திற்கான மேக்கப் சாதனங்களை வாங்க ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது, நீங்கள் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறீர் என்ற மெசேஜை மட்டும் இயக்குநர் அனுப்பினார் என தெரிவித்துள்ளார். ஆடை படத்தின் டீசரை பார்த்தபிறகே படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிகிறேன் என்றுள்ளார்.

மேலும், விஜய்சேதுபதி மீது தனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இது படக்குழு செய்யும் சூழ்ச்சி எனவும் விளக்கியுள்ளார். அமலா பாலுக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

More Cinema News
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
Advertisement