உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது... மே.இந்திய தீவுகளை விரட்டியடித்தது

CWC, India wins match against w.indies and enters semifinals

by Nagaraj, Jun 28, 2019, 08:55 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் பீடு நடை போடுகிறது.மே.இந்தியதீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் விறுவிறுவென முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் வெல்ல முடியாத அணி என்ற சாதனையை இந்தியா தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. நேற்று மான்செஸ்டரில் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மான்செஸ்டர் ஆடுகளம் எப்போதுமே பேட்டிங்குக்கு சாதகமானது என்பதால் இந்தியா அபாரமாக ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு 3-வது அம்பயர் கொடுத்த சர்ச்சைக்குரிய தீர்ப்பால் 18 ரன்களில் வெளியேற இந்திய அணி மந்தமான ஆட்டத்தையே வெளிப் படுத்தியது .லோகேஸ் ராகுலும் கேப்டன் கோஹ்லியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசத வாய்ப்பை தவறவிட்ட ராகுல் 48 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த விஜய்சங்கர் (14), கேதார்ஜாதவ் (7) ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட கோஹ்லியுடன் தோனி ஜோடி சேர்ந்தார்.

வழக்கம் போல இப்போட்டியிலும் தோனி பந்துகளை வீணடித்து ஆமை வேகத்தில் ரன் சேர்த்தார். இந்தத் தொடரில் 4-வது தொடர்ந்து 4 - வது முறையாக அரைசதமடித்த கோஹ்லி 72 ரன்களுக்கு வெளியேறினார். பந்துகளை வீணடிக்க, பாண்ட்யா மளமளவென 38 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய தோனி, கடைசி ஓவரில் தனது பாணியில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தத் தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்த தோனி, இந்தப் போட்டியில் அரை சதமடித்து (56) தம் மீதான விமர்சனங்களுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியமே. இந்திய தீவுகள் அணிக்கு, தனது வேகத்தில் ஷாக் கொடுத்த ஷமி, கெய்ல் (6),ஹோப் (5) ஆகியோரை பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். இதனால் மே.இந்திய தீவுகள் அணி ஆட்டம் கண்டு ரன் எடுக்கத் திணறியது. அம்ரிஷ் (31), பூரன் (28) ஜோடி மட்டும் ஓரளவு ரன் சேர்க்க, இந்திய பந்து பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் மே.இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 34.2 ஒவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா,சகால் தலா 2 விக்கெட்டுகளையும், பாண்ட்யா, குல்தீப் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். இந்தப் போட்டியில் தோற்ற மே.இந்திய தீவுகள் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

தொடர்ந்து 4-வது முறையாக சதமடித்த இந்திய கேப்டன் கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இந்தியா உறுதி செய்ததுடன், இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணி என்ற சாதனையுடன் இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. இன்னும் இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோத வேண்டி உள்ளது. இந்த 3 அணிகளையும் இந்தியா வெல்லும் பட்சத்தில், அரையிறுதி வாய்ப்பில் உள்ள இந்த 3 அணிகளுமே அந்த வாய்ப்பை பறிகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது... மே.இந்திய தீவுகளை விரட்டியடித்தது Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை