கொரோனா பீதியில் மாத்திரை சாப்பிடும் டொனால்டு டிரம்ப்..

Donald Trump says taking hydroxychloroquine, for treatment of coronavirus.

by எஸ். எம். கணபதி, May 19, 2020, 10:23 AM IST

தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயத்தில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 15 லட்சம் பேருக்கு நோய் பாதித்துள்ளது. 90 ஆயிரம் பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.


கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் வராமல் தடுப்பதற்கு மலேரியா சிகிச்சை மருந்தாக உள்ள குளோரோகுயின் பயன்படுத்தலாம் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதன்பிறகு, அந்த மருந்தை எடுக்கக் கூடாது என்று சில மருத்துவ நிபுணர்களும், அதில் ஓரளவு பலன் இருக்கிறது என்று சில நிபுணர்களும் கூறினர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொரோனா பரிசோதனை செய்த போது அவருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும் அவர் ஹைட்ராக்சி குளோரோகுயின் எடுத்து வருகிறார். இது பற்றி வெள்ளை மாளிகை டாக்டர், அவரிடம் கேட்டதற்கு நான் 10 நாட்களுக்கு ஒரு முறை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையும், ஜின்க் மாத்திரையும் எடுத்துக் கொள்கிறேன். எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது. அதனால் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுகிறேன் என்ற பதிலளித்துள்ளார்.
இதிலிருந்து கொரோனா பீதி, அமெரிக்க அதிபரையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

You'r reading கொரோனா பீதியில் மாத்திரை சாப்பிடும் டொனால்டு டிரம்ப்.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை